இது டப்பிங்கா? இல்ல ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பா? அருண் விஜய்யின் ஆக்ரோஷமான வீடியோ..!

இது டப்பிங்கா? இல்ல ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பா? அருண் விஜய்யின் ஆக்ரோஷமான வீடியோ..!

அருண் விஜய் நடித்து முடித்துள்ள 'மிஷன்’ என்ற திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் இது உண்மையில் டப்பிங்கா? அல்லது ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பா? என கமெண்ட் அடித்து வருகின்றனர்

அருண் விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்ற பிறகு இந்த படத்தின் டைட்டில் ’மிஷன் ’ என்று மாற்றப்பட்டதாகவும் சப்டைட்டில் ’சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே’ என்று பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அருண் விஜய் தனது பகுதியின் டப்பிங் பணிகளை செய்து வருகிறார் என்பதும் இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்ப ஆக்ரோஷமாக டப்பிங் ஸ்டுடியோவில் ஆக்சன் செய்வது போன்ற காட்சிகள் இருப்பதை பார்த்து அருண் விஜய்யின் அர்ப்பணிப்பு உணர்வை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அலெக்சாண்டர் கேஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES