'வாத்தி' சிங்கிள் பாடல்: தனுஷின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

'வாத்தி' சிங்கிள் பாடல்: தனுஷின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்பதும் முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 10ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் தனுஷ் மற்றும் ஸ்வேதா மேனன் பாடி இருப்பதாகவும் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்யும் போது அதை தனுஷ் பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் சாய் குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News