ஹாலிவுட் படத்திற்கு நிகரான ஆக்சன்: ஷாருக்கானின் 'பதான் ' டீசர்!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான் என்பதும் அவர் நடித்து வரும் ’பதான்’, ‘ஜவான்’, ‘டைகர் 3’ மற்றும் ‘டங்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஷாருக்கான் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டீசரில் ஷாருக்கானின் அதிரடி ஆக்சன் தீபிகா படுகோனேவின் அளவுக்கு அதிகமான கவர்ச்சி ஜான் ஆபிரகாமின் ஆக்ரோஷமான வில்லத்தனம் உள்பட பல காட்சிகள் அடங்கியுள்ளது.
குறிப்பாக இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்பட பலர் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.