நடிகர் விதார்த்தின் புதிய திரைப்படம்: சிங்கிள் பாடல் ரிலீஸ்!

நடிகர் விதார்த்தின் புதிய திரைப்படம்: சிங்கிள் பாடல் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான விதார்த் நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஎல் கண்ணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் மைக்கேல் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் ஹேமந்த் இசையில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் கொளஞ்சி குமார் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ’ஹே நீ’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளார் என்பதும் விவேகா எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES