'காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்: ராம்-நிவின் பாலி படத்தின் வீடியோ

'காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்: ராம்-நிவின் பாலி படத்தின் வீடியோ

’காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும் என இயக்குனர் ராம் இயக்கி வரும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவில் நிவின்பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர்களின் அற்புதமான கலை அம்சத்துடன் கூடிய காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவில் ’காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், மதி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES