கோப்ரா திரைவிமர்சனம்

கோப்ரா திரைவிமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது. விக்ரமின் பல வேடங்கள், அஜய் ஞானமுத்துவின் சஸ்பென்ஸ் இயக்கம் என பல எதிர்பார்ப்பை கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கோப்ரா முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம். 

கதைக்களம்

பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணிதம் மூலம் கணக்கு போட்டு ஒவ்வொரு நபரையும் கொலை செய்கிறார்.

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

 

இந்த கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க இஃபார்ன் பதான் இன்டர்போல் அதிகாரியாக என்ட்ரி தருகிறார். கொலை விசாரணையை தவறாக செய்து வருகிறீர்கள் என்று இஃபார்ன் பதானுக்கு உதவியாக வருகிறார் மீனாட்சி. கணிதத்தில் புத்திசாலியான மீனாட்சி இந்த அணைத்து கொலைகளுக்கும் மூலதனமாக கணிதம் ஒன்று தான் இருக்கிறது என கண்டுபிடிக்கிறார்.

இதை வைத்து விக்ரம் ஒரு கணிதம் அறிந்த கொலையாளி என்ற பாதையில் விசாரணை செல்கிறது. இது ஒரு புறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் விக்ரமின் பின்னணியில் இருந்து யார் அவரை செயல்படுத்துவது என்பதை உலகிற்கு தெரியப்படுகிறார் ஹாக்கர். இதன்பின் சற்று தடுமாறும் விக்ரமுக்கு அடுத்தடுத்து பல எதிர்பாரா திருப்பங்கள் காத்திருந்தது.

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

அதை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார்.. இந்த கொலைகள் எல்லாம் பணத்துக்காக தான் விக்ரம் செய்கிறாரா? புதிதாக கதையில் முளைத்த இந்த ஹாக்கர் யார்? இந்த அணைத்து விஷயங்களுக்கும் பின்னணியில் இருக்கும் வில்லன் யார் என்பதே படத்தின் மீதி கதை.. 

படத்தை பற்றிய அலசல்

சீயான் விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக போலீஸ் விசாரணை காட்சியில் திரையரங்கத்தை தெறிக்கவிட்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு கைதட்டல்களை தன்வசப்படுத்தியுள்ளார் விக்ரம். கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

 

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

மிர்னாலினி ரவி மற்றும் மீனாட்சி இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். விக்ரமின் சிறு வயது கதாபாத்திரம் படத்திற்கு பலம். அதே போல் விக்ரமின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள சர்ஜன் காலித்தின் நடிப்பும் சூப்பர். இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள இஃபார்ன் பதான் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளவாகவும் அழகாகவும் கொடுத்துள்ளார்.

வில்லன் ரோஷன் மேத்திவ்வை வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் வில்லன் என்று காட்டிக்கொள்ள கண் எதிரில் பார்க்கும் நபர்களை எல்லாம் கொன்று விடுகிறார். இதுதான் வில்லத்தனமா?. மற்றபடி கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ், முகம்மது அலி ஆகியோரின் நடிப்பு ஓகே.

 

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

இயக்குனர் அஜய் ஞானமுத்து எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். ஆனால், இயக்கமும் திரைக்கதையும் சற்று சொதப்பல் ஆகியுள்ளது. குறிப்பாக படத்தின் முதல் பாதி எப்போது நிறைவடையும் என்ற அளவிற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இடைவேளை காட்சியால் முதல் பாதியின் சலிப்பை பொறுத்துக்கொள்ள வேண்டியதா உள்ளது.

அஜய் ஞானமுத்துவுடன் சேர்த்து நீலன் கே.சேகர், கண்ணா ஸ்ரீனிவாசன், அசாருதீன் அலாவுதீன், இன்னாசி பாண்டியன் மற்றும் பரத் ஆகியோர் படத்தின் எழுத்தாளர்களாக இருந்தும் படத்தின் போக்கில் ஏன் இவ்வளவு தொய்வு என்பது கேள்விக்குறி தான். இவ்வளவு சொதப்பல் இருந்தாலும், கணிதம் பற்றியும் hallucination பற்றியும் அழகாக கூறியுள்ளார். அதற்க்கு பாராட்டு.

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

 

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் வேற லெவல். ஆனால், தரங்கிணி மற்றும் தும்பி துள்ளல் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது. ஜான் ஆபிரகாம், பூவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங் ஓகே. திலிப் சுப்ராயன் மாஸ்டரின் ஸ்டண்ட் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு ஓரளவு படத்தை தாங்கி நிற்கிறது.  

க்ளாப்ஸ்

விக்ரம் நடிப்பு

கதைக்களம்

கணிதம், hallucination காட்சியமைத்த விதம்

பல்ப்ஸ்

இயக்கம், திரைக்கதை சொதப்பல்

முதல் பாதி தொய்வு

மொத்தத்தில் எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது கோப்ரா.. 

கோப்ரா திரைவிமர்சனம் | Cobra Film Review

LATEST News

Trending News

HOT GALLERIES