'என்னை கடலுக்கு கூட்டிட்டு போறியா? கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்' டிரைலர்

'என்னை கடலுக்கு கூட்டிட்டு போறியா? கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்' டிரைலர்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய ’பேப்பர் ராக்கெட்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன். ரேணுகா. கருணாகரன். சின்னி ஜெயந்த். காளி வெங்கட். பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் மிகவும் சுவாரஸ்யமாகவும், படத்தின் கதை அம்சம் வித்தியாசமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ட்ரெய்லரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சைமன் கிங் இசையில் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES