லையனுக்கும் டைகருக்கும் பிறந்தவன் என் பையன்: விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' டிரைலர்

லையனுக்கும் டைகருக்கும் பிறந்தவன் என் பையன்: விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' டிரைலர்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்தேவரகொண்டா நடித்து வரும் ‘லைகர்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக ரன்னிங் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் விஜய்தேவரகொண்டா ஒரு குத்துச்சண்டை வீரர் கேரக்டரில் நடித்துள்ளார். குத்து சண்டைக்கு தயாராவதும், குத்துச் சண்டை வீரர்களுடன் மோதுவதுமான ஆவேசமான காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளன. டிரெய்லரின் ஆரம்பத்தில் என் பையன் லையனுக்கும் டைகருக்கும் பிறந்தவன் என்று ஆவேசமாக ரம்யா கிருஷ்ணன் கூறுவது படத்தின் டைட்டிலுக்கான அர்த்தமாக உள்ளது.

ஆகஸ்டு 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

HOT GALLERIES