ஹேப்பி பர்த்டே டு மீ : விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் திகில் வீடியோ!

ஹேப்பி பர்த்டே டு மீ : விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் திகில் வீடியோ!

விஷ்ணு விஷால் நடித்த ’எப்.ஐ.ஆர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படமான ’மோகன்தாஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கையில் சுத்தியல் மற்றும் கத்தியை வைத்துக்கொண்டு தொடர் கொலை செய்யும் விஷ்ணு விஷாலின் திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் பின்னணியில் 'ஹேப்பி பர்த்டே டூ மீ’ என்ற குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் விஷ்ணு விஷாலின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாறன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையில், கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

LATEST News

HOT GALLERIES