விஜய் படத்தை தயாரிக்க போனிகபூர் விதித்த இரண்டு நிபந்தனைகள்!
விஜய் படத்தை தயாரிக்க தயார் என்றும் ஆனால் இந்த இரண்டும் அந்த படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் போனிகபூர் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது .
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ச்சியாக மூன்று அஜித் படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தற்போது அவர் தயாரித்துள்ள உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் படத்தை எப்போது தயாரிப்பீர்கள் என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த போனிகபூர் ’விஜய் படத்தை தயாரிக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை என்றும், நல்ல கதை மற்றும் நல்ல இயக்குனர் கிடைத்தால் விஜய் படங்களை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அஜீத்தை அடுத்து விஜய் படத்தையும் விரைவில் போனிகபூர் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.