என் குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது: பிரபல பாடகி வருத்தம்!

என் குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது: பிரபல பாடகி வருத்தம்!

எனது குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்துவிட்டது என உலகப் புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் எங்கள் குழந்தையை கர்ப்பத்திலேயே இழந்துவிட்டோம் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே என் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. கர்ப்பத்திலேயே குழந்தை இறப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகுந்த துயரம் மிக்கது. நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இனி வரும் காலத்தில் அழகான குடும்பத்தை உருவாக்க முயற்சி செய்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்

பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த ஏப்ரல் 12ம் தேதி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது கர்ப்பம் கலைந்து விட்டது என்று அவர் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES