ரொம்ப பணக்கஷ்டம், 2000 ரூபாய்க்கு வேலைக்கு செல்கிறேன்: கமல்ஹாசனின் முன்னாள் மனைவி
ஒரு பக்கம் கமல்ஹாசன் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருப்பதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமல்ஹாசனை நடிகை சரிகா காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தனர். இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வரும் சரிகா, லாக்டவுன் நேரத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் நாடகத்தில் நடித்ததாகவும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கமல்ஹாசனின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.