'தலைவர் 169' படப்பிடிப்புக்கு முன் ரஜினி செய்யப்போகும் வேலை இதுதான்!

'தலைவர் 169' படப்பிடிப்புக்கு முன் ரஜினி செய்யப்போகும் வேலை இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முன் அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு ஓரிரு வாரங்கள் தங்கி இருந்து உடல் நலம் குறித்த பரிசோதனை முடிந்த பின் திரும்பி வருகிறார் என்றும், அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் அமெரிக்காவுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News