கொல்றது அவங்க நோக்கமில்லை, வேற ஏதோ காரணம் இருக்கு: 'விசித்திரன்' டிரைலர்

கொல்றது அவங்க நோக்கமில்லை, வேற ஏதோ காரணம் இருக்கு: 'விசித்திரன்' டிரைலர்

ஆர்கே சுரேஷ் நடித்த ‘விசித்திரன்’ திரைப்படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மர்மமான தொடர் கொலைகள் நடக்கும் நிலையில் அந்த கொலையை காவல்துறையில் பணிபுரிந்த விஆர்எஸ் வாங்கிவிட்டு சென்ற அதிகாரி ஆர்கே சுரேஷ் மீண்டும் களத்தில் இறங்கி கொலையாளிகளை கண்டு பிடிக்கும் கதை தான் ‘விசித்திரன்’ என்பது டிரைலரில் இருந்து தெரிய வ ருகிறது.

இந்த படத்தின் துப்பறியும் காட்சிகள் மிகவும் இயல்பாக இருப்பதாகவும், பின்னணி இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு மிக அருமை டிரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்கே சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா தயாரித்துள்ளார். பத்மகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷின் இசையில், வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆர்கே சுரேஷூக்கு வெற்றியை தேடித் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES