உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிரைலர்

உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிரைலர்

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது ,

முதலில் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட விஜய் சேதுபதி அதன்பின் எதிர்பாராத ஒரு தருணத்தில் சமந்தாவுடன் உறவு கொள்கிறார். இதனை அடுத்து இருவரையும் எப்படி அவர் வைத்து சமாளிக்கிறார் என்பதும் இருவரும் சமாதானம் அடைந்து விஜய் சேதுபதியை ஏற்றுக் கொண்டார்களா என்பது தான் இந்த படத்தின் காமெடியாக சொல்லும் கதை ,

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. தமிழ் சினிமாவின் ஒரு மிகப் பெரிய ஹீரோ என்ற இமேஜ் கொஞ்சம் கூட இல்லாமல் நாயகிகளிடம் மாறி மாறி அடிவாங்கும் காமெடி கலந்த ரொமான்ஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு அவருக்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்,

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் மாறிமாறிக் ரொமான்ஸ் காமெடியையும் வெளிப்படுத்தியுள்ளனர். மொத்தத்தில் வாய் விட்டு சிரிக்கும் வகையில் ஒரு நல்ல காமெடி ரொமான்ஸ் படத்தை எதிர்பார்க்கலாம் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது,

LATEST News

Trending News

HOT GALLERIES