அதிரடி ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி நடித்த சமந்தா!

அதிரடி ஆக்சன் காட்சிகளில் டூப் இன்றி நடித்த சமந்தா!

பிரபல நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி நடித்ததாகவும் அவருக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் பயிற்சி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகை சமந்தா நடித்து வரும் ’யசோதா’ என்ற படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் என்பவர் பணிபுரியவுள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமந்தாவுக்கு, யானிக்பென் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்கு பயிற்சி அளித்ததாக இந்த படத்தின் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சமந்தாவுக்கு ஒருசில அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி தைரியமாக நடித்ததாகவும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஸ்டண்ட் இயக்குனர் யானிக்பென் சமந்தாவுக்கு ரிகர்சல் செய்த நிலையில் அதனை வைத்து தனது சண்டை பயிற்சி திறமையை சமந்தா சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் தெரிவித்தனர்

சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் மணிசர்மா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES