ஆடியோ லாஞ்ச் இல்லை, ஆனால் அதற்கு பதிலாக செம விருந்து: 'பீஸ்ட்' லேட்டஸ்ட் அப்டேட்

ஆடியோ லாஞ்ச் இல்லை, ஆனால் அதற்கு பதிலாக செம விருந்து: 'பீஸ்ட்' லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்த தகவலின்படி இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு பதிலாக விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்னவெனில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு சன் டிவியில் விஜய், அனிருத், நெல்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கொடுத்த பேட்டி ஒளிபரப்பாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேட்டியின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News