'அஜித் 61' படப்பிடிப்பு தொடங்கும் முன் 'அஜித் 62' அறிவிப்பு?

'அஜித் 61' படப்பிடிப்பு தொடங்கும் முன் 'அஜித் 62' அறிவிப்பு?

அஜித் நடித்த 60வது திரைப்படமான ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை மற்றும் வங்கி ஒன்றின் பிரம்மாண்டமான செட் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென ‘அஜித் 62’ படத்தின் தகவல் கசிந்தது என்பதும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் நாளை ’அஜித் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அவருடைய 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News