அரபிக்குத்து' பாடலுக்கு மாலத்தீவில் டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து’ என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியானதில் இருந்து தற்போது வரை இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்றும் தெரிந்தது. மேலும் இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்து வருவது விஜய் ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தற்போது தனது குடும்பத்தாருடன் மாலத்தீவு சுற்றுலா சென்ற இருக்கும் நிலையில் 'அரபிக்குத்து’ பாடலுக்கு மாலத்தீவில் டான்ஸ் ஆடி உள்ள வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

அட்டகாசமாக திரைப்படத்தில் 'அரபிக்குத்து’ பாடலுக்கு ஆடியது போலவே ஸ்டேப் போட்டு நடனம் ஆடியுள்ள பூஜா ஹெக்டேவின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இதேபோன்ற ஸ்டெப் போட்டு நடனம் ஆடும் சவாலையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Do the #HalamithiHabibo with @hegdepooja@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @jonitamusic @manojdft @Nirmalcuts #Beast #BeastFirstSingle #ArabicKuthuChallenge pic.twitter.com/CsHfOEqe70
— Sun Pictures (@sunpictures) February 15, 2022