சிலம்பம் வீரர்களுக்கு தமிழ் நடிகர் செய்த மகத்தான உதவி!

சிலம்பம் வீரர்களுக்கு தமிழ் நடிகர் செய்த மகத்தான உதவி!

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டின் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தமிழ் நடிகர் ஒருவர் மகத்தான உதவி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான மெட்ரோ சிரிஷ், ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்துள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள பணவசதி இல்லாமல் இருந்த இரண்டு வீரர்களுக்கு தனது சொந்த செலவில் போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்துள்ளது மகத்தான உதவியாக கருதப்படுகிறது.

சர்வதேச சிலம்பம் விளையாட்டு நேபாளம் நாட்டில் பிப்ரவரி இரண்டாம் வாரம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த விளையாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சிலம்பம் வீராங்கனை நான்சி எஸ்தர் மற்றும் சிலம்பம் வீரர் அபிஷேக ராஜன் ஆகியோர் தேர்வு பெற்று இருந்தனர். ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு பண வசதி இல்லை என்ற தகவலை அறிந்த மெட்ரோ சிரிஷ், அவர்களை நேரில் வரவழைத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறும், அதற்கு தேவையான அனைத்து பண வசதி மற்றும் உதவிகளை தான் செய்வதாகவும் கூறி உள்ளார்.

மேலும் சிலம்பம் வீரர் மற்றும் வீராங்கனையுடன் மெட்ரோ சிரிஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES