கவின் நடித்த 'ஆகாஷ்வாணி': அசத்தலான டீசர்!
கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கவின் கடந்த சில மாதங்களாக ’ஆகாஷ்வாணி’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

இந்த நிலையில் ’ஆகாஷ்வாணி’ திரைப்படம் ‘ஆஹா’ ஓடிடியில் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த டீசரில் ஆகாஷ் என்ற கேரக்டரில் நடித்துள்ள கவின், வாணி என்ற கேரக்டரில் நடித்துள்ள ரெபா மோனிகாவை காதலிப்பதும் அதன்பின் ஏற்படும் பிரச்சினைதான் கதை என்பதும் இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது

கவின், ரெபா மோனிகா, ஷரத் ரவி, தீபக் பரமேஷ். லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எனாக் என்பவர் இயக்கியுள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு குணா பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.