மஞ்சள் ஜாக்கெட் ஒரு லட்சமா? நடிகை சமந்தாவால் ஷாக்கான ரசிகர்கள்!

மஞ்சள் ஜாக்கெட் ஒரு லட்சமா? நடிகை சமந்தாவால் ஷாக்கான ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா தற்போது சுவிட்சர்லாந்தில் விடுமுறை தினத்தைக் கொண்டாடி வருகிறார். மேலும் அவர் பனிச்சறுக்கு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்தப் பயிற்சியின்போது அவர் அணிந்திருந்த ஸ்னோ ஜாக்கெட்டின் விலையைக் குறித்து அலசிய ரசிகர்கள் தங்களது ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை சமந்தா இதற்குமுன்பு கோவா, ரிஷிகேஷ், ஷார்ஜா போன்ற இடங்களுக்குத் தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே தனது விடுமுறை தினத்தை கழித்து வருகிறார். மேலும் பனிச்சறுக்கு விளையாடுவது குறித்து அவர் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது நடிகை சமந்தா பயன்படுத்திய உடையும் ரசிகர்களை ஈர்த்திருந்தது. இதனால் அந்த உடையைப் பற்றி இணையத்தில் அலசிய ரசிகர்கள் மஞ்சள் நிற ஸ்னோ ஸ்போர்ட் ஜாக்கெட் Moncler எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் அதன் விலை ரூ.1,22,212 என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் நடிகை சமந்தா பயன்படுத்திய மற்றொரு மஞ்சள் நிற ஜாக்கெட்டின் விலை ரூ.75,000 என்பதையும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES