1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'தேஜாவு' டீசர்

1 மில்லியன் பார்வைகளை கடந்தது 'தேஜாவு' டீசர்

தமிழ் திரை உலகில் தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி என்பதும் இவர் நடித்த 'தேஜாவு' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினரும், தயாரிப்பாளரும்,அருள்நிதியின் சகோதரருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இந்த டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றது என்பதும், தற்போது இந்த டீசருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரித்துள்ள இப்படத்தினை PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES