பிரபல இசையமைப்பாளரை பாராட்டிய இயக்குனர் சிவா

பிரபல இசையமைப்பாளரை பாராட்டிய இயக்குனர் சிவா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சிவா பிரபல இசையமைப்பாளரை பாராட்டி பகிர்ந்துள்ளார்.

 

இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

கணம்

கணம்

 

 

தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்  உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அம்மா பாடல் வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலுக்கு பலரும் அவர்களுடைய பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

ஜாக்ஸ் பிஜாய்

ஜாக்ஸ் பிஜாய்

 

இந்நிலையில் இயக்குனர் சிவா 'கணம்' படத்தின் அம்மா பாடலை கேட்ட பிறகு இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய்யை பாராட்டி செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய், ‘கணம்' படத்தின் அம்மா பாடல் வெளியானதிலிருந்து எனக்கு ஏராளனமான வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் உச்சகட்டமாக தனது படங்களின் மூலம் உயிரோட்டமான பாடல்களை கொடுக்கும் இயக்குனர் சிவாவின் பாராட்டு அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இயக்குனர் சிவா, சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES