நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன? சமுத்திரக்கனியின் 'பப்ளிக்' வீடியோ

நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன? சமுத்திரக்கனியின் 'பப்ளிக்' வீடியோ

நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன? என்ற வசனத்துடன் சமுத்திரக்கனி நடித்த ‘பப்ளிக்’ என்ற திரைப்படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஒரு மாட்டிடம் அரசியல்வாதி ஒருவர் கேள்வி கேட்கிறார். அந்த கேள்விக்கு அந்த மாடு எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதேபோல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து நாங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் சொல்லவில்லை என்று குறிப்பிடும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் உண்மை என்றும் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்ற டைட்டில் கார்டுடன் இந்த படம் தொடங்குவதாகவும் இந்த வீடியோவில் உள்ளன. மேலும் ரித்விகா, காளிவெங்கட் இடம்’ நீ வச்சிருக்கிறது ஓட்ட சைக்கிள், பெட்ரோல் விலை பற்றி உனக்கென்ன?’ என்று கூறும் வசனமும் இடம்பெற்றுள்ளது.

சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரா. பரமன் என்பவர் இயக்கியுள்ளார். டி இமான் இசையில், ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவில், பிரவீன் கேஎல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES