நேற்று புகைப்படம், இன்று வீடியோ: மாலத்தீவு மாளவிகாவுக்கு குவியும் லைக்ஸ்!

நேற்று புகைப்படம், இன்று வீடியோ: மாலத்தீவு மாளவிகாவுக்கு குவியும் லைக்ஸ்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகன் தற்போது தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் இருந்துகொண்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவதால் அவரை ’மாலத்தீவு மாளவிகா’ என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்

இந்த நிலையில் நேற்று நீச்சல் குளத்தில் மிதந்த படி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இன்று அதே நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது என்பதும், இந்த வீடியோவுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES