டைட்டானிக் போஸில் ஆர்யா-சாயிஷா: ஜாலியான ஹாலிடே புகைப்படம்!
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா மற்றும் சாயிஷா டைட்டானிக் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, நடிகை சாய்ஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் சாயிஷா சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தனது கணவர் ஆர்யாவுடன் ஜாலியாக ஹாலிடே டூர் சென்றுள்ள சாயிஷா, டைட்டானிக் போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
