இன்ஸ்டாவில் சாதனை… டான்ஸ் ஆடி பார்டி பண்ணிய நடிகை சன்னிலியோன்!

இன்ஸ்டாவில் சாதனை… டான்ஸ் ஆடி பார்டி பண்ணிய நடிகை சன்னிலியோன்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம்வரும் நடிகை சன்னிலியோனுக்கு இந்தியா முழுக்கவே ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் சினிமாவைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கிளாமர் வேடங்களுக்காக அறியப்பட்ட இவர் தற்போது கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களில் வரிசைக்கட்டி பிசியாக நடித்துவருகிறார்.

சினிமாவைத் தவிர சோஷியல் மீடியா பக்கங்களிலும் நடிகை சன்னிலியோனை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடரும் ஃபாலோயர்கள் தற்போது 50 மில்லியனாக அதிகரித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் தத்தளித்த நடிகை சன்னிலியோன் குதூகலமாக டான்ஸ் ஆடிய படியே பார்டி பண்ணலாமா? எனத் தனது ரசிகர்களிடம் கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் இதற்கு முன்பு நடிகை தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், ஜாக்குலின் பெர்ணான்டஸ், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு 50 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னிலியோனை பின்தொடரும் ஃபாலோயர்கள் 50 மில்லியனைத் தாண்டியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை சன்னிலியோன் பாலிவுட் சினிமாவில் Koka Kola, Helen, The Battle of Bhima koregoan போன்ற படங்களில் நடித்துவருகிறார். தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் “வீரமாதேவி“ எனும் திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் இவருடைய “ஜீரோ“, “ஓ மை கோஸ்ட்“ போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES