எம்ஜிஆர் நடிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன்

எம்ஜிஆர் நடிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன்

எம்ஜிஆரின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அஜய் பிரதீப் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

எழுத்தாளர் கல்கி 1950களில் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் உலகின் கிளாசிக் நாவலாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக சந்தையின் போதும் அதிகமாக விற்கும் புத்தகங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் நாவல் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கும்.

 

இந்த நாவலை எம்ஜிஆர் படமாக்க வேண்டும் என்று முயன்று, அதற்காக இயக்குனர் மகேந்திரனை திரைக்கதை எழுத வைத்தார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் தன் தயாரிப்பில் கமல் நடிப்பில் அதை உருவாக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னம் பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.

 

எம்ஜிஆர்

 

அவரை தவிர ரஜினியின் இளையமகள் பொன்னியின் செல்வனை வெப் தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது எம் ஜி ஆரை அனிமேஷன் கதாபாத்திரமாக மாற்றி பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும், வெப் சீரிஸாகவும் உருவாக்க இருக்கிறார்கள்.

 

இளையராஜா இசையமைக்க இருக்கும் இப்படத்தை அஜய் பிரதீப் இயக்க இருக்கிறார். பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

LATEST News

Trending News