ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்: பிரேம்ஜியின் முதல் கமெண்ட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் முதல் கமெண்ட்டை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் டிரெண்ட் ஆனார் என்பதும் அதன் பின் அவருக்கு குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்பட பல வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே பாணியில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

ரம்யா பாண்டியன் எப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தாலும் பிரேம்ஜி முதல் நபராக கமெண்ட்ஸ் அளிக்கும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🖤#RamyaPandian pic.twitter.com/fmD5wdUEHd
— Ramya Pandian (@iamramyapandian) January 16, 2022