வில் போல் வளைந்து வேற லெவலில் 'வலிமை' நாயகியின் யோகா: வைரல் புகைப்படங்கள்!

வில் போல் வளைந்து வேற லெவலில் 'வலிமை' நாயகியின் யோகா: வைரல் புகைப்படங்கள்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் போல் வளைந்து யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப் படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ அஜித் நடித்த ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஹூமா குரோஷி, இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நான்கரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ஹூமா குரோஷி தனது வீட்டின் மொட்டை மாடியில் வில் போல் வளைந்து யோகா செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஹூமா, இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES