நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய். 1995-ல் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதற்கு பிறகு பாண்டவர் பூமி, இயற்கை, குற்றம் 23 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

 

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து அனைவரும் பாதிப்புக்குள்ளானார்கள். சினிமா பிரபலங்களில் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

அருண் விஜய்

அருண் விஜய்

 

அதில், நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டேன். அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்

LATEST News

Trending News

HOT GALLERIES