சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டீசர்

சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டீசர்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீஸரின் வீடியோவில் ’இங்கே மனிதர்கள் இரண்டே வகைதான். ஒருத்தர் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைக்கிற சாமானியர்கள், இன்னொருத்தர் அந்த சாமானியர்களின் பணம், புகழ், பதவி, அதிகாரத்தை பறிக்க நினைக்கும் சாத்தான்கள். சாத்தான்களின் விதியை மாற்றி எழுத வேண்டிய சூழல் ஒருநாள் ஒரு சாமானியன் கைக்கு வரும்’ என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசர் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு உள்ளது என்பதும் விஷாலின் ஆக்சன் படங்களில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என்றும் டீசரில் இருந்து தெரிய வருகிறது.

து.பா. சரவணன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், டிம்பிள் ஹையாதி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கவின்ராஜ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES