சிம்புவுடன் ஜோடி சேரும் பிரம்மாண்ட இயக்குனரின் மகள்?

சிம்புவுடன் ஜோடி சேரும் பிரம்மாண்ட இயக்குனரின் மகள்?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஒருவரின் மகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ‘பத்து தல’ மற்றும் ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கொரோனா குமார்’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிதிஷங்கர் தற்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் அடுத்த படத்தில அதிதிஷங்கர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News