சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி: 'ஓ சொல்றியா' வீடியோ வைரல்

சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி: 'ஓ சொல்றியா' வீடியோ வைரல்

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமந்தாவின் ஐட்டம் பாடலான ‘ஓ சொல்ரியா ஓஓ சொல்றியா’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி, சமந்தாவின் ‘ஓ சொல்ரியா ஓஓ சொல்றியா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரது டான்ஸ் மூவ்மெண்ட் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் செய்து வந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் ஜூலியின் நடனத்தை கேலி செய்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES