நடிகர் மாதவனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா?

நடிகர் மாதவனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா?

நடிகர் மாதவனின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பதும் இவர் தற்போது ’ராக்கெட்டரி’ என்ற தமிழ் திரைப்படத்திலும் 2 ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ராக்கெட்டரி’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தை ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் அறிவழகன் தற்போது அருண்விஜய் நடித்துவரும் ’பார்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் இறுதிகட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES