மீண்டும் க்ரே மேன் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற தனுஷ்!
நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான க்ரே மேன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடந்து வருகிறது.
தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் அவர் நடிக்கும் த க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதத்தில் இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கு காட்சிகளில் நடித்து வந்தார்.
அதையடுத்து இப்போது மீதமுள்ள அவர் காட்சிகளை படமாக்குவதற்காக மீண்டும் லண்டன் பயணித்துள்ளார். அங்கு படப்பிடிப்பில் அவர் நடிக்கும் காட்சி ஒன்றின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.