டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றில் தேர்வான முதல் பெண் தலைவர்!

டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றில் தேர்வான முதல் பெண் தலைவர்!

98 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள டிஸ்னி நிறுவனத்தின் வரலாற்றில் தற்போது முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

கார்ட்டூன், அனிமேஷன் படங்கள் தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனம் வால்ட் டிஸ்னி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் ஆரம்பித்து 98 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் முதல் முறையாக தலைவர் பதவியில் சூசன் அர்னால்டு என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 வருடங்கள் டிஸ்னி இயக்குனர் குழுவில் இருந்து வரும் இவர், கார்லைல் குரூப், பி அண்ட் ஜி குரூப், மெக்டொனால்ட் குரூப் ஆகிய நிறுவனங்களில் உயர் பதவியை வகித்துள்ள நிலையில் தற்போது டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் பதவியை பெற்று உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News