மீண்டும் இணைந்து நடிக்கும் ஜோதிகா மற்றும் சூர்யா! அவரே சொன்ன விஷயம்..

மீண்டும் இணைந்து நடிக்கும் ஜோதிகா மற்றும் சூர்யா! அவரே சொன்ன விஷயம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் சூர்யா, ஜோதிகாவாக தான் இருக்க முடியும்.

திரைப்படங்களில் ஜோடியாக நடித்து வந்த இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டுருந்த ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படத்திலிருந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது, இப்படம் அமேசான் பிரைம் நேரடியாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜோதிகா மீண்டும் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் "நானும் சூர்யாவும் திரைப்படத்தில் நடிக்க தயாராகவுள்ளோம். ஆனால் அதற்கான நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை.

நாங்கள் சேர்ந்து நடிக்க காத்துகொண்டு இருக்கிறோம், பல வருடங்கள் கழித்து நாங்கள் சேர்ந்து நடிப்பதால் அப்படம் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்". 

LATEST News

Trending News

HOT GALLERIES