எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட வில்லன் இந்த பிரபல தமிழ் நடிகரா?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பட வில்லன் இந்த பிரபல தமிழ் நடிகரா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்எஸ் ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படத்தை எஸ்எஸ் ராஜமெளலி இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்க விக்ரம் ஒப்புக் கொள்வார் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மகேஷ்பாபு, விக்ரம் மற்றும் எஸ்எஸ் ராஜமெளலி இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News