“அப்பா இறந்ததும் அவரோட ஆவி அம்மாக்குள்ள போச்சு” - தன் Life Story-ஐ சொன்ன அபிஷேக்!

“அப்பா இறந்ததும் அவரோட ஆவி அம்மாக்குள்ள போச்சு” - தன் Life Story-ஐ சொன்ன அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதைசொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த பிக்பாஸில் விஜே அபிஷேக் தன் கதையை கூறியிருக்கிறார்.

 

 

அவர் சொல்லும்போது, “நான் மதுரையைச் சேர்ந்த பையன். மதுரை, தமிழகத்தின் உள் சிட்டி. அங்கு பீச் கூட கிடையாது. புல்லட் சத்தம் தான் அப்பா என்று நான் நினைத்துக் கொள்வேன். ஏனென்றால் அவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. நான் தூங்கும்போது வீட்டுக்கு வருவார். நான் கற்றுக் கொண்டதெல்லாம் உழைப்பை செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலனை பற்றி பிரச்சனை இல்லை. எதிர்பார்ப்பேன். ஆனால் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இருப்பேன்.

அம்மாவின் அதீத சிந்தனைகளில் ஒரு துளி தான் நானும் என் அக்காவும். என்னுடைய சின்ன வயது புகைப்படங்களில் புலி மாதிரி இருப்பேன். என் அப்பாவை பொறுத்தவரை அந்த ஆள் அவன் வாழ்க்கையை வாழ்ந்தான். அவ்வளவு இன்ஸ்பிரேஷன் அவர். ஒரு நாள் அவர் என் வீட்டு செல்ஃபை நோண்டினார். அப்போது நான் அப்துல் கலாம் பற்றி எழுதி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் ஐயா அவர்களை நேரில் சந்திப்பதற்கு என் தந்தை ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.

 

ஆம் அந்த நேரத்தில் மதுரையிலிருந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவிடம் என் அப்பா, நான் எழுதிய அந்த குறிப்பை அனுப்ப, அவர் அதைப் படித்துவிட்டு எனக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார். அது என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. என் அக்காவைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் எனக்காக விட்டுக்கொடுத்தாள்.  அப்பாவை பொறுத்தவரை அவர் எப்போதும் ஏழரையை கட்டிப்பிடித்து தூங்குவார். சில நேரங்களில் முத்தம் கொடுப்பார். 2016-ஆம் ஆண்டுக்கு முன் அப்பா கட்டிய வீட்டை அவரே அடகு வைத்து 18 வருடம் அவருக்கு டிரைவராக இருந்த ஒருவருக்கு பெரிய தொகையை உதவியாக கொடுத்தார்.

 

ஒருகட்டத்தில் அந்த டிரைவர் இறந்துபோக, என் அப்பா அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்தார்.  நாங்கள் எல்லாம் நடுரோட்டுக்கு வந்தோம். அப்போது எனக்கு திருமணம் செய்து கொண்டேன். அந்த சூழலில் நான் அதை செய்திருக்க கூடாது என்று வருத்தப்படுவதுண்டு. கடன் பற்றி அப்பா என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. பேசவில்லை. அந்த தொகையை நான் திருப்பிக் கட்ட வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கவில்லை.

 

என் அப்பா அந்த தொகையை திருப்பித் தருவதற்காக எல்லாவற்றையும் விற்றார். அவருடைய சாவுக்கு நான்தான் காரணம் என்கிற குற்ற உணர்வு எனக்கு இப்போது வரை இருக்கிறது. நான் திருமணம் செய்திருக்க கூடாது. அப்பா இறந்த அன்று அவருடைய ஆவி அம்மாவுக்குள் சென்றதை நான் பார்த்தேன். அவராகவே அம்மா மாறினார்.

அப்பா இறந்த அன்று ஒருவன் அழுதான். அவன் வீட்டிற்கு வந்து அழுதுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, என் அம்மாவிடம் நான் சொன்னேன், இவன் ஏதேனும் சித்தி பையனாக இருந்தால் இவனிடம் சொல்லி விடுங்கள், சொத்து எல்லாம் இல்லை, கடன் வேண்டுமானால் இருக்கிறது. அதை அவனையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது அவனை விசாரித்த போது அவன் சொன்னான், தினமும் எங்கள் வீட்டுக்கு மொபைல் போன் பில் கொண்டு வருவானாம்.

 

அப்படி வந்தவனுக்கு என் தந்தை 40 ஆயிரம் ரூபாய் அந்த கஷ்டத்திலும்  கொடுத்து அவன் பிள்ளையின் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார் என்று கூறி அழுதான். இப்படி என் தந்தை பல பேருக்கு உதவி செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 15 பேரை படிக்க வைத்திருக்கிறார். அதற்காக பணம் செலவு செய்திருக்கிறார். ராஜாவாக வாழ்ந்த ஒரு ஆள், கோழையாக இறந்ததாக நாங்கள் கருதியது உண்டு. ஆனால் உண்மையில் அவர் அப்படி இறக்கவில்லை.

தன் மருமகளுக்கு தான் பைத்தியம் என தெரியக்கூடாது. கதவை சாத்தி வை என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நீங்கள் பைத்தியம் இல்லை அப்பா என நான் சொல்வேன். அவர் எப்போதும் என்னிடம் வலியை ஏற்றுக் கொள் என்று சொல்லி வளர்த்தார். எல்லாவற்றையும் தாண்டி, 2 வருடங்களில் நான் என்னுடைய அந்த சொந்த வீட்டை மீட்டேன்.

 

அதற்கு நான் சம்பாதித்ததை எல்லாம் இன்வெஸ்ட் செய்தேன். என் தாயாரின் நகையை விற்றேன். அப்பாவின் உழைப்பின் சின்னமாக இருந்தது அந்த வீடு. அந்த பில்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் அவருடைய ரத்தம். எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கவில்லை. என்னை அடிக்க அடிக்க நான் மேல வந்துட்டே இருப்பேன்!” என்று அபிஷேக் ராஜா தன்னுடைய கதையை கூறி முடித்தார்.

LATEST News

Trending News

HOT GALLERIES