இந்த நடிகர் மீது எந்த ஃபீலிங் இருக்கு.. ஓப்பனாக சொன்ன அனிகா.. அப்போ அந்த நடிகையின் நிலைமை..?
என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடிகர் அஜீத்குமாருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். பேபி நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன், இப்போது நாயகியாக நடிக்க துவங்கிவிட்டார்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அவர் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜீத் மகளாக நடித்திருந்தார்.
அதே போல் சிறுத்தை சிவா இயக்கத்தில், விஸ்வாசம் படத்தில் அஜீத்குமார் – நயன்தாரா மகளாக நடித்திருந்தார்.
இதில் நயன்தாரா ஒரு கட்டத்தில் தன் குழந்தையுடன் பிரிந்து விட, மகளை பார்க்க வரும் அஜீத் அவருடன் ஒரு பாடிகார்டாக இருந்து அனிகாவை காப்பாற்றுவதும், கடைசியில் அப்பா – மகள் என அறிவதும் உணர்ச்சிமயமான அந்த காட்சிகளில் அனிகா நடிப்பு வேற லெவலில் இருந்தது.
பேபி நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன், கடந்தாண்டில் மலையாளத்தில் புட்டபொம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஓ மை டார்லிங் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இவர் இந்த வயதிலேயே உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடிப்பது ரசிகர்களை திகைப்படைய செய்துள்ளது.
பொதுவாக அனிகா சுரேந்திரன் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, அவரது சமூக வலைதளங்களில் தனது வரம்பு மீறிய அதீத கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். அஜீத்குமாரின் ரீல் மகளான இவரது இந்த நடவடிக்கை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
எனினும் இளம் ரசிகர்கள், இதுபோன்ற கவர்ச்சியை தாராளமாக காட்டுவதால் அனிகா மீது தனி ஆர்வம் கொண்டு அவரது புகைப்படங்கள், வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் மாலத்தீவுக்கு சென்று வந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட அனிகா சுரேந்திரனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.
அதே போல் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் அவர் பேசிய விஷயமும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த நேர்காணலின் போது, உங்களுக்கு எந்த ஹீரோ மீது க்ரஷ் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அனிகா சுரேந்திரன், தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டா மீதுதான் எனக்கு க்ரஷ் உள்ளது என கூறியிருக்கிறார்.
விஜய் தேவர கொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வரும் நிலையில், எனக்கு விஜய் தேவர கொண்டா மீது பீலிங் இருக்கு என்ற ஒரு பதிலை அனிகா ஓப்பனாக சொல்லியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனிகா, விஜய் தேவர கொண்டாவை விரும்பினால், ராஷ்மிகாவின் நிலமை என்னாவது என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.