பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்- ஐஸ்வர்யாவே கொடுத்த விளக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன்- ஐஸ்வர்யாவே கொடுத்த விளக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா வேடத்தில் புதிய நாயகி காட்டப்பட இருக்கிறது. 

தீபிகாவிற்கு பதிலாக சாய் காயத்ரி, ஐஸ்வர்யா வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல் எப்போதோ வந்தது தான்.

நன்றாக நடித்துவந்த தீபிகா திடீரென சீரியலில் இருந்து விலகியது ஏன் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதற்கு அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தீபிகா.

அவருக்கு அலர்ஜி இருந்ததாம், அதற்கான சிகிச்சை பெற்றுவந்த அவர் சரியாகிவிடும் என இருந்திருக்கிறார். ஆனால் முகத்தில் மேக்கப் போட போட அலர்ஜி அதிகமாகியுள்ளது.

சீரியல் குழுவினரும் சரியாகிவிடும் என நம்பிக்கையாக தான் கூறியுள்ளார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அலர்ஜி அதிகமாக நாம் கொஞ்சம் இடைவேளை விட்டுதான் ஆக வேண்டும் என தீபிகா சீரியலில் இருந்து வெளியேற முடிவு செய்தாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES