உளவு பார்த்த டச்சப் மேன்.. ரூமுக்கு அனுப்பி ஜெயம் ரவியை ரகசியமாக வீடியோ எடுக்க சொல்வாராம் ஆர்த்தி..
நடிகர் ஜெயம் ரவி கடந்த மாதம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக கூறி அதிர்ச்சி கொடுத்த சம்பவம் தற்போது வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஆர்த்தியும் தன் பங்கிற்கு விவாகரத்துக்கு விருப்பம் இல்லை, அவருடன் பேசத்தயார் என்றும் விளக்கத்தை கூறியிருந்தார். இதுகுறித்து பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
ஆர்த்தி - ஜெயம் ரவியை ஆரம்பத்தில் கோர்த்துவிட்டதும், கல்யாணம் செய்ய காரணமாக இருந்ததும் நடிகை குஷ்பூதான். ஆனால் ஜெயம் ரவி அப்பா மோகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் ஜெயம் ரவி, சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
அதன்பின் திருமணம் நடந்து இருவரும் நல்லாத்தான் இருந்திருக்காங்க. நான் வாந்தி எடுக்கும்போது அதை கையிலேயே ஜெயம் ரவி பிடிச்சிக்கிட்டார் என்றும் என்னை தாங்கு தாங்குன்னு தாங்கினார் என்றும் ஆர்த்தி பேட்டியில் கூறியிருந்தார்.
அதன்பின் தான் பிரச்சனை வெடித்துள்ளது. தன்னை வேலைக்காரர்களைவிட மட்டமாக நடத்தியதாக ஜெயம் ரவி கூறி ஷாக் கொடுத்துள்ளார். ஆர்த்தி எப்போதுமே தன் மாமனார் வீட்டுக்கு போகமாட்டார். அப்படி போனாலும் கொஞ்சம் நேரத்தில் திரும்பி வந்துவிடுவாங்க.
ஜெயம் ரவி வாட்ஸ் அப்புக்கு, ஏதாவது நடிகையின் போட்டோ வந்தால், இந்த நடிகை யார்? இந்த நடிகை ஏன் வாட்ஸ் அப்பிற்கு போட்டோ அனுப்ப வேண்டும் என்று கேள்வி கேட்டு ஆர்த்தி தகராறு செய்வாராம். நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் கைக்குலுக்குவது, ஹக் பண்ணுவது என்பது இயல்பு, ஆனால் இதையும் ஆர்த்தி சந்தேகப்பட்டுள்ளார்.
டச்சப் பாய், மேக்கப் மேன் என்று யாராவது ஒருவரை ஜெயம் ரவி தங்கிருந்த ஓட்டல் ரூமுக்குள் அனுப்பி உளவு பார்க்க, நோட்டம் விடச் சொல்வாராம் ஆர்த்தி. அந்த ரூமுக்குள் போயிட்டு வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனுக்கு அனுப்ப சொல்வாராம். அதனால்தான் ஜெயம் ரவி உச்சகட்ட வெறுப்படைந்து விவாகரத்து பெற முடிவெடுத்தார் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.