பிறந்த நாளில் ரஜினியின் அதிரடி அறிவிப்பு: செளந்தர்யா ரஜினி தகவல்!

பிறந்த நாளில் ரஜினியின் அதிரடி அறிவிப்பு: செளந்தர்யா ரஜினி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்றைய பிறந்த நாளில் அவர் அறிவித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அடுத்து ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையில் இருந்து ஏழை எளிய, வாழ்வாதாரம் அற்ற 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்த பணியை வழக்கறிஞர் சத்திய குமார் மற்றும் சூர்யா ஆகியோர்கள் எடுத்து நடத்த உள்ளனர் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ரஜினிகாந்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News