பார்த்திபனுக்கு ஜோடியாக நயன்தாரா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா..!
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ஜவான் படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதன்பின், நயன்தாரா 75, டெஸ்ட் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். நயன்தாரா நடிப்பதாக இருந்த அல்லது இயக்குனரின் முதல் சாய்ஸ் நயன்தாராவாக இருந்து சில திரைப்படங்கள் அவர் கைநழுவி போயுள்ளது.
அப்படி நயன்தாரா நடிப்பதாக இருந்து மிஸ் செய்த திரைப்படம் தான் குடைக்குள் மழை. பார்த்திபன் இயக்கி நடித்த இப்படத்தில் முதன் முதலில் பார்த்திபனுடன் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.

ஆனால், சில காரணங்களால் நயன்தாராவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக, இப்படத்தின் வாய்ப்பு அவர் கைநழுவி போயுள்ளது.
 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        