டிக்கிலோனா திரைவிமர்சனம்

டிக்கிலோனா திரைவிமர்சனம்

கதைக்களம்

2020 ஆம் ஆண்டு, சந்தானம் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஹாக்கி வீரராக வேண்டும் என்று நினைத்து வந்த சந்தானம், பெரியதாக ஜெயிக்க முடியாததால் ஈ.பி.மேனாக வேலை பார்த்து வருகிறார்.

மேலும் திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருப்பதால் விரக்தியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், 2027ஆம் ஆண்டு சந்தானத்திற்கு மின்சாரம் சரி செய்ய போன இடத்தில் டைம் மிஷின் ஒன்று கிடைக்கிறது.

இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கு சென்று தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் சந்தானம் படம் முழுக்க தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆனால் சில இடங்களின் போர் அடிக்கிறது.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஸ்ரின் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார் யோகிபாபு. ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு, படத்திற்கு பெரிய பலம்.

கெஸ்ட் ரோலில் வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. இதுபோன்ற கதைகளில் திரைக்கதையை கையாள்வது மிகவும் கடினம். அதை ஓரளவிற்கு சரியாக செய்து இருக்கிறார் இயக்குனர்.

யுவன் சங்கர் ராஜா இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக ரீமேக் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யுவனின் பின்னணி இசையும், அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்

LATEST News

Trending News

HOT GALLERIES