ஹீரோயின் ஆனார் ரக்ஷிதா

ஹீரோயின் ஆனார் ரக்ஷிதா

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு ஹீரோயின்கள் வந்த காலம் மாறி இப்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள்.

இவர்கள் வரிசையில் இப்போது சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமியும் ஹீரோயின் ஆகிறார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.

ஏற்கெனவே பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் , இப்போது கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயின் ஆகிறார்.

LATEST News

Trending News