நெற்றிக்கண் பட புரொமோஷனை தொடங்கிய நயன்தாரா- எந்த தொலைக்காட்சியில் வருகிறார் பாருங்க, லேட்டஸ்ட் லுக்
விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் நெற்றிக்கண்.
படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது. திரையரங்கில் படங்கள் ரிலீஸ் என்பது இப்போதைக்கு இல்லை, எனவே இந்த நெற்றிக்கண் படத்தை படக்குழு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி Disney+Hotstarல் ரிலீஸ் செய்கின்றனர்.
படம் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் புரொமோஷனுக்காக நயன்தாரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் நெற்றிக்கண் படத்தை புரொமோட் செய்ய தொடங்கியுள்ளார், படப்பிடிப்பு தளத்தில் அவர் ரசிகையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
