பிக்பாஸ் லாஸ்லியாவுக்காக சூர்யா செய்யும் உதவி!

பிக்பாஸ் லாஸ்லியாவுக்காக சூர்யா செய்யும் உதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட போட்டியாளர்களின் சிலருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து வருகிறார்கள் என்பதும் அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற லாஸ்லியா தற்போது ’ப்ரெண்ட்ஸ்’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்று ’கூகுள் குட்டப்பா’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ்லியாவின் படத்தை நடிகர் சூர்யா புரமோஷன் செய்து உதவி செய்திருப்பதை அடுத்து படக்குழுவினர் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரான தர்ஷன் நாயகனாகவும், லாஸ்லியா நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். கேஎஸ் ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES